“88% அதிகரித்த ரியல் எஸ்டேட்.. சென்னையில் கண்ணை மூடிக்கொண்டு இங்கே வீடு வாங்குங்க.. பல கோடி லாபம்
சென்னை: 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சென்னையின் குடியிருப்பு ரியல் எஸ்டேட் சந்தை புதிய உச்சத்தை அடைந்து உள்ளது. முந்தைய காலாண்டை விட வீட்டுப் பதிவுகள் 88% அதிகரித்து உள்ளன.
தென்சென்னை 4,309 வீடுகள் பதிவு செய்யப்பட்டு முன்னிலை வகிக்கிறது,.வடசென்னை 1,518 வீடுகளுடன் இரண்டாம் இடத்தில உள்ளது, மீஞ்சூர் மற்றும் மாதவரம் போன்ற பகுதிகளில் புதிய வீடுகள் வாங்க மக்கள் காட்டும் ஆர்வம் காரணமாக அங்கே வீடுகள் அதிகம் வாங்கப்பட்டு உள்ளது.
சிட்டி அளவில், 8,042 வீடுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பரந்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் போன்ற மண்டலங்களில் தயாராக உள்ள வீடுகளும் உடனுக்குடன் விற்பனை செய்யப்படுகிறது. வலுவான தேவை இங்கே அதிக விலையில் வீடுகள், நிலங்கள் விற்பனை ஆகின்றன.
மெட்ரோ பணிகள்
மெட்ரோ பணிகள் காரணமாக சென்னையில் பல பகுதிகளில் நிலமதிப்பு வெகுவாக உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.” பல்லாவரம்,
குரோம்பேட்டை,
திரு வி கா நகர்,
தாம்பரம்,
இரும்புலியூர்,
பெருங்களத்தூர்,
வண்டலூர்,
அண்ணா உயிரியல் பூங்கா,
கிளாம்பாக்கம் ஆகிய இடங்களில் நிலம் மதிப்பு உயரும்.
எவ்வளவு மதிப்பு உயரும்?
பல்லாவரம் – 40- 50 % மதிப்பு உயரும்.
குரோம்பேட்டை – 25- 40 % மதிப்பு உயரும்.
திரு வி கா நகர் – 25- 40 % மதிப்பு உயரும்.
தாம்பரம் – 50-60% மதிப்பு உயரும்.
வண்டலூர் – 25- 40 % மதிப்பு உயரும்.
அண்ணா உயிரியல் பூங்கா – 40- 50 % மதிப்பு உயரும்.
கிளாம்பாக்கம் – 50-60% மதிப்பு உயரும்.
ஸ்ரீபெரும்புதூர்
விரைவுச் சாலையின் தொடக்கப் புள்ளியாகச் கருதப்படும் ஸ்ரீபெரும்புதூரில் ஏற்கனவே நிலக் கட்டணம் உயர தொடங்கி உள்ளது. இங்கே நிலத்தின் மதிப்பு 30% வரை உயரும் என்று ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எண்ணூர் துறைமுகம் மாமல்லபுரத்தில் இருந்து 133 கிமீ நீளமுள்ள சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டின் பெரும்பகுதி 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இங்கே நிலத்தின் மதிப்பு உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
ஒரகடம்
தொழில்துறை மையமாக அறியப்படும் ஒரகடம், எக்ஸ்பிரஸ்வேயால் இன்னும் மதிப்பு உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இது வணிக மற்றும் குடியிருப்பு முதலீடுகளுக்கு கவர்ச்சிகரமான இடமாக கருதப்படுகிறது. இங்கே நிலத்தின் மதிப்பு 40% வரை உயரும் என்று ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாம்பரம்
விரைவுச்சாலைக்கு அருகாமையில் உள்ளதால், தாம்பரம் விரும்பி வாங்கும் இடமாக மாற்ற வாய்ப்புள்ளது.இங்கே நிலத்தின் மதிப்பு 50% வரை உயரும் என்று ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் ஓஆர்ஆர் சாலைக்கு அருகிலும் தாம்பரம் இருப்பதால் இங்கே நிலத்தின் மதிப்பு வேகமாக உயரும்.
பரந்தூர்
விரைவுச் சாலையில் இருந்து அருகில் இருப்பதால், ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு பரந்தூர் முக்கிய இடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இங்கே நிலத்தின் மதிப்பு 50% வரை உயரும் என்று ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன